திருவண்ணாமலையில் 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையில் 11 நாட்களாக ஜோதி பிழம்பாய் காட்சியளித்த மகா தீபக் கொப்பரை கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகும்விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார்கோயில் ஆகும் அண்ணாமலையார் கோயில் கார்த்திகைதீபத்திருவிழா கடந்த நவம்பர் 27 ம் தேதிகொடியேற்றத்துடன் தொடங்கி அனுதினமும்பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனம் மற்றும் மகாரதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிமாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்குஅருள்பாலித்தனர்.

தொடர்ந்து கார்த்திகை தீபத் திருவிழா 10 நாட்களாக சிறப்பாக நடைபெற்று கடந்த டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கோயில்கருவறையில் 4 மணிக்கு பரணி தீபமும் அதனை தொடர்ந்து அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் 5 3/4 அடி உயரமும் 300 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 4500 லிட்டர் நெய் மற்றும் 1100 மீட்டர் காடா துணியை திரியாக பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மலையின் உச்சியில் மகா தீபம்ஏற்றப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் (16.12.2022) மகாதீப தரிசனம்நிறைவுபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை மகாதீப கொப்பரைக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு
பின்னர் மலையின் உச்சியில் இருந்துகொப்பரை இறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். மலையின் உச்சியில் கொப்பரைக்குசிறப்பு ஆராதனைகள் நடைபெற்று இரண்டு நீளமானகட்டையில் கட்டி இறக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த கொப்பரையில் உள்ள நெய்யை பயன்படுத்திஅண்ணாமலையார் கோயிலில் மை தயார் செய்யப்படும்இந்த மையை வருகின்ற ஜனவரி 6 ஆம் தேதிநடைபெறும் ஆருத்ரா தரிசனத்தில் நடராஜருக்கு நெற்றியில் திலகம் இட்டு பின்னர் பொதுமக்களுக்கும், மெய் காணிக்கையாக செலுத்திய ஆன்மீக பக்தர்களுக்கு கூரியர் மற்றும் தபால் மூலமாக தீபமை பிரசாதமாக அளிக்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
