HomeBreaking Newsமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

-

- Advertisement -

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் குற்றப்பத்திரிகை நகலை வழங்கியுள்ளது.முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது சிறப்பு நீதிமன்றம்!

செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்கள் பென் டிரைவ் மூலம் வழங்கப்பட்டன.

we-r-hiring

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக அவர் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.

அப்போது, வழக்கில் தொடர்புடைய செந்தில் பாலாஜி உள்ளிட்ட முதல் 50 பேருக்கு குற்றப்பத்திரிகையின் நகல்கள் பென் டிரைவ் வடிவில் வழங்கப்பட்டன.

போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டிருப்பது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

 

MUST READ