- Advertisement -
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு நாள்தோறும் 3,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறிப்பிட்ட 15 நாட்களுக்கும் கர்நாடகா காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினசரி 3,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் சூழலில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நீர் திறப்பின் மூலம் தமிழகத்தின் காவிரி பாசனப் பகுதிகளுக்குத் தேவையான நீர் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
