Homeசெய்திகள்தமிழ்நாடுஒரு வாக்கு கூட புறக்கணிக்கப்படக் கூடாது என திரைப்படம் எடுத்தவர்; இன்று 13 கோடி மக்களின்...

ஒரு வாக்கு கூட புறக்கணிக்கப்படக் கூடாது என திரைப்படம் எடுத்தவர்; இன்று 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி

-

- Advertisement -

“ஒரு வாக்கு கூட புறக்கணிக்கப்படக் கூடாது” என்ற கருத்தை மையமாகக் கொண்டு ஒரு திரைப்படமே எடுத்தவர், இன்று 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க மறுப்பது ஏன் என முதலமைச்சர் விஜய்க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.ஒரு வாக்கு கூட புறக்கணிக்கப்படக் கூடாது என திரைப்படம் எடுத்தவர்; இன்று 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வர் மௌனம் காப்பது ஏன்? – சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கேள்வி

 

we-r-hiring

தமிழ்நாடு நாட்டிலேயே அமைதியான மாநிலம் என்பதை ஆளுநர் பிரதமரிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்துக் கேட்பதற்காக ஆளுநரை அழைக்க வேண்டும் என்றால், உத்தரப் பிரதேச மாநில ஆளுநரைத்தான் அழைக்க வேண்டும் என்றும் வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்

அதேநேரத்தில், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையே இல்லை என்று தாம் கூறவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

13 கோடி வாக்குகள் குறித்த கேள்வி

ஒரு வாக்கு கூட புறக்கணிக்கப்படக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் திரைப்படம் எடுத்தவர், தற்போது 13 கோடி மக்களின் வாக்குகள் பறிக்கப்பட்டுள்ளதாகத் தாம் குற்றம்சாட்டும் விவகாரத்தில் ஏன் மௌனம் காக்கிறார் என முதலமைச்சர் விஜய்யிடம் வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குரிமை தொடர்பான இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக உள்ளது.

தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – டிசம்பர் 11 வரை பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்யலாம்!

MUST READ