Homeசெய்திகள்மாவட்டம்கரூர் இந்திரா நகரில் 10 ஆண்டுகளாக பாழடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் –...

கரூர் இந்திரா நகரில் 10 ஆண்டுகளாக பாழடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் – குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி; புதிய கட்டிடம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

-

- Advertisement -

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடிவேல் நகர் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் 33-ஆம் எண் அங்கன்வாடி மையம், கடந்த 10 ஆண்டுகளாகப் பழுதடைந்த ஓட்டு வீட்டில் இயங்கி வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.கரூர் இந்திரா நகரில் 10 ஆண்டுகளாக பாழடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் – குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி; புதிய கட்டிடம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

இங்கு சுமார் 15 குழந்தைகள் பயின்று வரும் நிலையில், கட்டிடத்தின் மோசமான நிலை காரணமாக அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

we-r-hiring

15 குழந்தைகள் பயிலும் மையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை

இந்த அங்கன்வாடி மையத்தில் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு சமையலர் என இருவர் பணியாற்றி வருகின்றனர். இந்திரா நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், பெரும்பாலான பெற்றோர் கூலி வேலைக்குச் செல்கின்றனர். இதனால், காலை 9 மணிக்கு குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டுச் செல்லும் பெற்றோர், மாலை 3 மணியளவில் மீண்டும் அழைத்துச் செல்கின்றனர்.

குழந்தைகள் தினமும் தங்கிப் பயிலும் இந்த மையத்தின் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. கட்டிடத்தின் செங்கற்கள் பெயர்ந்து விழும் நிலையில் இருப்பதுடன், போதிய கழிப்பறை வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இல்லை எனப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் தெருநாய்களின் தொல்லையும் அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.கரூர் இந்திரா நகரில் 10 ஆண்டுகளாக பாழடைந்த ஓட்டு வீட்டில் இயங்கும் அங்கன்வாடி மையம் – குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி; புதிய கட்டிடம் அமைக்கப் பொதுமக்கள் கோரிக்கை!

மழைக்காலத்தில் இடிந்து விழும் அபாயம் – பெற்றோர் அச்சம்

தற்போது மழைக்காலம் என்பதால், ஏற்கெனவே பழுதடைந்துள்ள கட்டிடம் மேலும் சேதமடைந்து இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் பெற்றோர்களிடையே ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் நாள்தோறும் இந்தக் கட்டிடத்திலேயே இருப்பதால், ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடுமோ எனப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனக் குற்றச்சாட்டு

அங்கன்வாடி மையத்தை வேறு பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனப் பலமுறை அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அங்கன்வாடி மைய மேற்பார்வையாளர் மாலதியிடம் கேட்டபோது, பெற்றோர்கள் பலமுறை கட்டிடத்தை மாற்றக் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அப்பகுதியில் குறைந்த வாடகையில் பாதுகாப்பான கட்டிடம் கிடைக்காததால் இடமாற்றம் செய்வதில் சிக்கல் நீடிப்பதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

புதிய கட்டிடம் அமைக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை

குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பே மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழுதடைந்த கட்டிடத்தில் தொடர்ந்து அங்கன்வாடி மையம் செயல்படுவதைத் தவிர்த்து, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றவோ அல்லது புதிய கட்டிடம் அமைத்துத் தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கள்ளக்குறிச்சியில் 2 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பம் – தனபாக்கியம் உயிரிழப்பு; உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு எனப் புகார்!

MUST READ