Homeசெய்திகள்சினிமாராக்கா' படம் குறித்து அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!

ராக்கா’ படம் குறித்து அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜுன் ராக்கா படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.ராக்கா' படம் குறித்து அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பான் இந்திய ஸ்டாரான அல்லு அர்ஜுன், இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ராக்கா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மேலும் பல பிரம்மாண்டத் திரைப்படங்களிலும் அவர் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். ‘புஷ்பா 2’ திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதால், அதனை அல்லு அர்ஜுனின் அடுத்தடுத்த படங்கள் முறியடிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் ‘ராக்கா’ திரைப்படம் குறித்து, சமீபத்தில் நடைபெற்ற விழா மேடை ஒன்றில் அல்லு அர்ஜுன் முக்கிய அப்டேட் ஒன்றைக் கொடுத்துள்ளார்.ராக்கா' படம் குறித்து அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!மேடையில் ‘ராக்கா’ திரைப்படம் குறித்துப் பேசிய அல்லு அர்ஜுன், “மிக விரைவில் ‘ராக்கா’ திரைப்படத்திலிருந்து ஒரு முக்கிய அப்டேட்டை நாங்கள் கொடுக்கவுள்ளோம். இந்தப் படம் சற்று தாமதமாகிக்கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஆனால், படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்போது, மிகச் சிறந்த படைப்பாக அதைக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று கூறினார்.ராக்கா' படம் குறித்து அல்லு அர்ஜுன் கொடுத்த மாஸ் அப்டேட்!
தொடர்ந்து பேசிய அவர், “அதை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு விஷயத்தையும் நாங்கள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு உருவாக்கி வருகிறோம். தயவுசெய்து பொறுமையாக இருங்கள். நிச்சயமாக ஒரு பிரமாதமான படைப்பை உங்களுக்குக் கொடுப்போம்.” என்று ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார். அல்லு அர்ஜுனின் இந்தப் பேச்சு, ‘ராக்கா’ படத்திற்காகக் காத்திருக்கும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

MUST READ