நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயக்கி வரும் ‘ராக்கா’ திரைப்படத்தின் அப்டேட் வெளியாகத் தாமதமாவது ஏன் என்பது குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் விளக்கம் அளித்துள்ளார்.

அல்லு அர்ஜுன் நடிக்கும் இந்தப் பிரம்மாண்ட திரைப்படத்தில் தீபிகா படுகோனே முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மேலும், ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிவியல் புனைகதை பின்னணியில் உருவாகி வரும் இப்படம், பான் இந்தியா திரைப்படமாகத் தயாராகி வருகிறது. உலகின் முன்னணி விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் படத்தின் முக்கிய காட்சிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இப்படம் 2027-ம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்டேட் தாமதம் குறித்து அல்லு அர்ஜுன் விளக்கம்
‘ராக்கா’ திரைப்படம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகாமல் இருப்பதால் ரசிகர்கள் நீண்ட நாட்களாக அப்டேட்டுக்காகக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அல்லு அர்ஜுனிடம் படத்தின் அப்டேட் எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “ராக்கா படம் குறித்த அப்டேட் தாமதமாகி வருவது எனக்குத் தெரியும். ஆனால், எப்போது அப்டேட் கொடுத்தாலும் அது மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க படக்குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். படத்தின் தரத்தில் எந்தவித சமரசமும் செய்ய விரும்பவில்லை. எனவே ரசிகர்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். நிச்சயம் ஒரு சிறந்த படைப்பை வழங்குவோம்” என்று தெரிவித்தார்.
மேலும், தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இதனால் ‘ராக்கா’ படத்தின் அடுத்த அப்டேட் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அதிகரித்துள்ளது.
இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்…. ‘ஓம்’ படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!
