ஜூனியர் என்.டி.ஆர் – திரிவிக்ரம் படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவின் ஸ்டார் நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளிவந்த ஆர்ஆர்ஆர், தேவரா ஆகிய படங்கள் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன. அதைத் தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் பிரசாந்த் நீல் இயக்கத்தில், டிராகன் படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். கிட்டத்தட்ட இந்த படம் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் இந்த படத்தை 2027 ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
இதற்கிடையில், ஜூனியர் என்டிஆர் அடுத்தடுத்த பிரம்மாண்ட படங்களில் கமிட்டாகி வருகிறார். அதில் ஒன்று, திரிவிக்ரம் இயக்கத்தில் அவர் கமிட் ஆகியுள்ள புதிய படம். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ஹரிகா மற்றும் ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனமும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தைத் தயாரிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படமானது ஒரு மித்தாலஜிக்கல் ஆக்சன் படமாக உருவாக இருக்கிறதாம்.
மேலும், இப்படத்திற்கு ‘காட் ஆஃப் வார்’ அல்லது ‘தேவசேனாபதி’ போன்ற தலைப்புகளில் ஒன்றை வைக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இருப்பினும், படத்தின் டைட்டில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கன்ஃபார்ம் செய்யப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பைப் பொறுத்தவரை, வருகிற 2027 ஜூலை மாதத்தில் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களை மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.
