Homeசெய்திகள்க்ரைம்வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி...

வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள குரும்பபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் பலரும் ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் விவசாயிகள் வளர்த்து வரும் ஆடுகளைக் குறிவைத்து மர்ம நபர்கள் திருடிச் செல்வதாகக் கூறப்படுகிறது.வத்தலக்குண்டு அருகே ஆடு திருடும் கும்பல் அட்டகாசம் – 3 ஆடுகளைத் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியீடு!

இதுகுறித்து வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஆடு திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பூசாரிபட்டியைச் சேர்ந்த விவசாயி சம்பத் என்பவர் தனது ஆட்டுத் தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல் திருடிச் சென்றுள்ளது. மூன்று ஆடுகளை அந்த நபர்கள் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏற்கனவே வளர்ப்பு ஆடுகள் அடிக்கடி திருடு போவதாகப் புகார் அளித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, ஆடு திருட்டில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அருப்புக்கோட்டை அருகே இரட்டைக் கொலை: மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொன்ற கணவர் கைது – எஸ்.பி. நேரில் விசாரணை!

MUST READ