Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து...

கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

-

- Advertisement -

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கள்ளக்குறிச்சி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைக் கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசைக் கண்டித்தும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தேமுதிக மாவட்டச் செயலாளர் கருணாகரன் தலைமை தாங்கினார்.கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றச்சாட்டு: எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம் – 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்காத தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான தமிழக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷைக் கைது செய்ய வேண்டும் – டி.ஒய்.எஃப்.ஐ மாநிலப் பொறுப்பாளர் சந்துரு வலியுறுத்தல்; இன்று 7 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்!

MUST READ