Homeசெய்திகள்தமிழ்நாடுதவெக ஆட்சியில் வெடிக்கும் அதிகார யுத்தம்: ஜானுக்கு எதிராகக் களமிறங்கிய அமைச்சர்கள்!

தவெக ஆட்சியில் வெடிக்கும் அதிகார யுத்தம்: ஜானுக்கு எதிராகக் களமிறங்கிய அமைச்சர்கள்!

-

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் அதிகார மையங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ஆளும் கட்சிகளில் கோஷ்டிப் பூசல் வழக்கமான ஒன்றாக இருந்தாலும், தவெகவில் நிலவும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. கீழ்மட்ட நிர்வாகம் முதல் மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகம் வரை பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் அடிதடி மோதல் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சரைச் சுற்றி மூன்று அதிகார மையங்கள்?

முதலமைச்சர் விஜயைச் சுற்றி ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி, ஜெகதீஷ் ஆகிய மூவர் முக்கிய அதிகார மையங்களாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஜெகதீஷ், தன்னை முதலமைச்சரின் தனிச் செயலாளர் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் அரசாணை (GO) வெளியிடப்படாமலேயே முதலமைச்சரின் ஆலோசகர்களாக அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புக் கூட்டங்களில் பங்கேற்று கையெழுத்திட்டு வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஜான் மீது அமைச்சர்கள் அதிருப்தி?

முதலமைச்சரிடம் ஜான் ஆரோக்கியசாமியின் செல்வாக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மற்றொரு ஆலோசகரான விஷ்ணு ரெட்டி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், தங்களைப் பற்றி உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் முதலமைச்சரிடம் தவறான தகவல்களைத் தெரிவிப்பதாகவும், ஆலோசகராகப் பொறுப்பேற்ற ஜான் தங்களது துறை சார்ந்த விவகாரங்களில் தலையிடுவதாகவும் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ‘ஜூனியர் ஜான்’ என்று அழைக்கப்படும் நபர் இளைய அமைச்சர்களை மிரட்டுவதுடன், துறை சார்ந்த பணிகள் மற்றும் இடமாற்ற உத்தரவுகளிலும் தலையிடுவதாகக் கூறப்படும் புகார்கள் அமைச்சர்களின் அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

திரிஷாவைச் சந்தித்த அதிருப்தி அணியினர்?

உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் கூட முதலமைச்சரைச் சந்திப்பதற்கு ஜானிடம் அனுமதி பெற வேண்டிய சூழல் இருப்பதாகக் கூறப்படும் தகவல் இந்த மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் அதிருப்தியில் உள்ள விஷ்ணு ரெட்டி மற்றும் மூத்த, இளைய அமைச்சர்கள் ஒன்றிணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் நோக்கில், அமைச்சர்கள் குஷி, ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் திரிஷாவைச் சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்போது ஜான் ஆரோக்கியசாமியை அதிகாரப் பொறுப்பிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்ததாகவும், அதற்குத் திரிஷா சரியான நேரத்தில் முதலமைச்சர் விஜயிடம் பேசுவதாக உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜான் ஆரோக்கியசாமியின் செல்வாக்கு தொடருமா?

தேர்தல் வெற்றிக்கு முன்பும், வெற்றிக்குப் பிறகும் ஜான் ஆரோக்கியசாமி தெரிவித்த கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் மீது முதலமைச்சர் விஜய் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஜான் ஆரோக்கியசாமிக்கு எதிராகத் திரிஷா தலைமையில் அதிருப்தி அணியினர் ஒன்றிணைந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தவெக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முதலமைச்சர் விஜயின் நம்பிக்கையைப் பெற்றுள்ள ஜான் ஆரோக்கியசாமியின் செல்வாக்கு தொடருமா அல்லது அமைச்சர்கள் மற்றும் விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோரின் எதிர்ப்பால் அதிகார அமைப்பில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

கருகும் பயிர்கள்.. Silent Mode-இல் CM..! “விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல” – மு.க.ஸ்டாலின்..

MUST READ