Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனியின் 30-வது படம்... வெளியான புதிய அப்டேட்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

விஜய் ஆண்டனியின் 30-வது படம்… வெளியான புதிய அப்டேட்…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

-

- Advertisement -

விஜய் ஆண்டனி 30 ஆவது படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.விஜய் ஆண்டனியின் 30-வது படம்... வெளியான புதிய அப்டேட்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகத் தனது திரைப் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, தற்போது அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன் 1’ மற்றும் ‘பிச்சைக்காரன் 2’ ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில், ‘பிச்சைக்காரன் 3’ திரைப்படமும் உருவாகப் போவதாக விஜய் ஆண்டனியே அறிவித்திருந்தார். இதற்கிடையில், இவருடைய நடிப்பில் ‘அப்பா குட்டி’ திரைப்படம் கடந்த நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், விஜய் ஆண்டனியின் 30-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாண்டியன் ஆதிமூலம் இயக்க, கே.ஜே. கணேஷ் மற்றும் விஜய் செல்லையா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு தற்காலிகமாக VA30 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.விஜய் ஆண்டனியின் 30-வது படம்... வெளியான புதிய அப்டேட்.... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து வரும் விஜய் ஆண்டனியின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் டைட்டில், நடிகர் – நடிகை விவரங்கள், கதைக்களம், கதாபாத்திரம் போன்ற விவரங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

MUST READ