spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

-

- Advertisement -

 

"வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்"- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!
Photo: PMO

இன்று (மே 28) நண்பகல் 12.00 மணியளவில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, ரூபாய் 75 ரூபாய் நாணயத்தையும், நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பை நினைவுக்கூறும் வகையில் தபால் தலையையும் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

we-r-hiring

75 ரூபாய் நாணயத்தை வெளியிடும் மத்திய அரசு- நாணயத்தின் சிறப்புகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

பின்னர் புதிய நாடாளுமன்றத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “தமிழ்நாட்டின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளிக்கும். புனிதமான செங்கோலின் பெருமையை மீட்டெடுக்க முடிந்தது நமது அதிர்ஷ்டம். செங்கோல் தற்போது தான் சரியான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்றத்தின் சிறப்புக்களைப் பற்றி பேசும், அதேவேளையில் கிராமங்களை இணைக்க 4 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

தேசத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபதம் ஏற்க வேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும். நான்கு கோடி ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன, 11 கோடி கழிவறைகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன.

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி!

புதிய நாடாளுமன்ற வளாகத்தின் கட்டுமானம் காலத்தின் கட்டாயம். எம்.பி.க்கள் உயர்ந்தால் அவர்கள் எங்கே அமர்வார்கள் கேள்வியைக் கருத்தில் கொண்டே முடிவெடுக்கப்பட்டது. சுதந்திரத்தின் 100ஆவது ஆண்டின் போது, நாம் முன்னேறிய நாடாக மாறியிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் தாயகம் இந்தியா; உலக நாடுகளுக்கும் ஜனநாயகத்தின் அடித்தளமாக இந்தியா உள்ளது. பாரம்பரியமும், நவீனத்துவமும் இணைந்த கட்டுமானத்திற்கு நாடாளுமன்றமே உதாரணம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ