Homeசெய்திகள்தமிழ்நாடுசாஸ்த்ரா பல்கலைக்கழக நில விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சாஸ்த்ரா பல்கலைக்கழக நில விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

-

- Advertisement -

சாஸ்த்ரா பல்கலை

 தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரத்தில் உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. மேலும், அந்த நிலத்தைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி: திருமலைசமுத்திரத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த 31.37 ஏக்கர் புஞ்சை தரிசு நிலத்தைச் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்து, அங்குக் கட்டிடங்கள் கட்டி வகுப்புகள் நடத்தி வருவதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி நிலத்தை மீட்க வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து, வருவாய்த் துறையினர் அந்த நிலத்தைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, அது அரசு நிலம் என அறிவிப்புப் பலகையும் வைத்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணை: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்துச் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முன்னதாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்வி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், சர்ச்சைக்குரிய நிலத்திற்குப் பதிலாக மாற்று நிலத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்‌ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சுப்ரீம் கோர்ட்தமிழக அரசின் நிலைப்பாடு மற்றும் உத்தரவு: விசாரணையின் போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, பல்கலைக்கழகம் முன்வைத்த மாற்று நில விருப்பங்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என மாநில அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், மிகப்பெரிய அளவிலான அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு விரிவான பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், நிலத்தைக் காலி செய்யும் நடவடிக்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

மேகதாது விவகாரம்: இப்போது வீரப்பன் மட்டும் இருந்திருந்தால் பேச முடியுமா? ஒரு செங்கல் கூட கட்ட விடமாட்டோம் – அன்புமணி ஆவேசம்!

MUST READ