Homeசெய்திகள்சினிமாஆறு பிரேக்-அப்... டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்... கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!

ஆறு பிரேக்-அப்… டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்… கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!

-

- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஆலியா மானசா. இவர், அதே சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆறு பிரேக்-அப்... டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்... கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகும் சின்னத்திரைத் தொடர்களில் நடிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஆலியா மானசாவின் நடனத்திற்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் இதற்கு சமூக வலைதளங்களும் ஏராளமான பாலோவர்ஸ் இருக்கிறார்கள். ​இந்நிலையில், தனது கடந்தகாலக் காதல் உறவுகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து ஆலியா மானசா தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். ஆறு பிரேக்-அப்... டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்... கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!இதுவரை தனது வாழ்க்கையில் ஆறு பிரேக்-அப்களை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ஒருதலைக் காதலை நினைவுகூர்ந்த ஆலியா, தான் ஆழமாகக் காதலித்த ஒருவரால் நிராகரிக்கப்பட்டதாகவும், அது தன்னை மனதளவில் கடுமையாகப் பாதித்து தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் எண்ணத்திற்குக் கூடத் தள்ளியதாகவும் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.
​மேலும், சில உறவுகளில் தான் மிகவும் உண்மையாக இருந்தபோதும், எதிர் தரப்பில் அந்த அளவிற்கான ஈடுபாடு இல்லாமல் போனதாக அவர் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி, தனது முன்னாள் காதலர்களில் ஒருவரிடம் இருந்து கடுமையான தொல்லைகளை சந்தித்ததாகவும் அவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். ஆறு பிரேக்-அப்... டார்ச்சர் செய்த முன்னாள் காதலர்... கடந்து வந்த பாதை குறித்து ஆலியா மானசா!அந்த மிகக் கடினமான காலகட்டத்தில்தான் சஞ்சீவ் தனது வாழ்க்கையில் நுழைந்து, தனக்குத் துணையாக நின்று அதிலிருந்து மீண்டு வர உதவினார் எனக் கூறியுள்ள ஆலியா மானசா, “சஞ்சீவ் ஒரு ஹீரோ போல வந்து என்னைக் காப்பாற்றினார்” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

​

MUST READ