Homeசெய்திகள்சினிமாரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் .... ரீ- ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்!

ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் …. ரீ- ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்!

-

- Advertisement -

ரஜினி பிறந்தநாளில் ரஜினியின் சூப்பர் ஹிட் படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் .... ரீ- ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்!

அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் ஒரே சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். ஆரம்பத்தில் ஒரு கண்டக்டராகப் பணியாற்றி விசில் அடித்துக் கொண்டிருந்த அவருக்கு, இன்று கோடான கோடி ரசிகர்கள் தியேட்டர்களில் விசில் அடித்து ஆரவாரம் செய்வார்கள் என்று அவரே கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த அளவுக்குத் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவிலும் அவருக்குப் பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது. ரஜினிக்கெனத் தனித்துவமான ஸ்டைல் உண்டு. அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை, அந்த ஸ்டைலுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் .... ரீ- ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்! ஒவ்வொரு படத்திலும் அவருடைய ஸ்டைலாகட்டும், பஞ்ச் வசனங்களாகட்டும் எல்லாமே தனித்துவமாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையிலும் இருக்கும். ரஜினியின் படம் என்றாலே பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனைதான். அந்த வகையில், சமீபத்தில் வெளியான அவரது ‘ஜெயிலர் 2’ திரைப்படமும் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் சாதனை படைத்தது. தற்போது அவர் நடித்து வரும் தர்மன் படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.ரஜினி பிறந்தநாள் கொண்டாட்டம் .... ரீ- ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்!இதற்கிடையில், வருகின்ற டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினிகாந்தின் பிறந்தநாள் வருகிறது. அந்த நாளை இன்னும் சிறப்பாக்க, தர்மன் படக்குழுவினரிடமிருந்து ஏதேனும் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவரது பிறந்தநாளை ரசிகர்கள் மேலும் உற்சாகமாகக் கொண்டாடும் வகையில், 1992-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘அண்ணாமலை’ திரைப்படம் 4K தரத்தில் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குஷ்பு, சரத் பாபு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 11-ஆம் தேதி இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுவதால், இதைக் கொண்டாட ரசிகர்கள் இப்போதிலிருந்தே தயாராகி வருகின்றனர்.

 

MUST READ