Homeசெய்திகள்வணிகம்நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் – சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு!

நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் – சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு!

-

- Advertisement -

தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு – வெள்ளி விலையில் மாற்றமில்லை; நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் – சென்னையில் தங்கம் விலை அதிரடி குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 28) சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.93,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வார இறுதி நாளான இன்று தங்கம் விலை குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிடுவோருக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.11,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.93,760-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,70,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலை மாற்றமின்றித் தொடர்வது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு

MUST READ