HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் – மேடை தயார்!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம் – மேடை தயார்!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக மலை உச்சியில் தீப மேடை அமைக்கப்பட்டுள்ளதுடன், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான பொருட்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவினர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

தீபம் ஏற்றுவதற்கு மேடை தயார்!

மலை உச்சியில் உள்ள தீபத்தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீது விளக்கு வைப்பதற்காகப் பலகைகள் பொருத்தப்பட்டு, தீபம் ஏற்றுவதற்கான மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான 30 கிலோ நெய், 50 மீட்டர் கடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் ஆகியவை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையில் இருந்து வந்த தீபக் குழுவினர்!

இதற்கிடையே, திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் பணியில் ஈடுபடும் மிராசுகள் அடங்கிய ஆறு பேர் கொண்ட குழுவினர் திருப்பரங்குன்றத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான திரிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திரி அமைக்கப்பட்ட மண்கலயங்களைத் தயார் செய்து, மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி!

MUST READ