Homeசெய்திகள்தமிழ்நாடுஸ்டாலினைக் கட்டித் தழுவிய ராகுல் காந்தி: "எப்படியாவது மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்" - சென்னையில் பரபரப்புச்...

ஸ்டாலினைக் கட்டித் தழுவிய ராகுல் காந்தி: “எப்படியாவது மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்” – சென்னையில் பரபரப்புச் சந்திப்பு

-

- Advertisement -

Rahul Gandhi Embraces M.K. Stalin, Presses DMK to Oppose the Bill

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதா விவகாரம் தேசிய அரசியலில் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது சென்னை இல்லத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது ஸ்டாலினை அன்புடன் கட்டித் தழுவிய ராகுல் காந்தி, இந்த மசோதாவுக்குத் திமுக எப்படியாவது எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.

இல்லம் தேடி வந்த இந்தியா கூட்டணித் தலைவர்கள்

நவம்பர் 30-ஆம் தேதி நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையில் திமுகவின் 22 மக்களவை மற்றும் 8 மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகள் தீர்க்கமானதாக மாறியுள்ளன. தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதாகக் கூறி மசோதாவுக்குத் திமுக ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், அந்த முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரி இந்தியா கூட்டணித் தலைவர்கள் சென்னைக்கு விரைந்தனர்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மு.க.ஸ்டாலினின் இல்லத்திற்கு வருகை தந்தனர்.

Rahul Gandhi Embraces M.K. Stalin, Presses DMK to Oppose the Bill

உருக்கமான சந்திப்பும், ராகுல் காந்தியின் வேண்டுகோளும்

இல்லத்திற்கு வந்த ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் வரவேற்ற நிலையில், ராகுல் காந்தி அவரைக் கட்டித் தழுவித் தனது அன்பையும் நட்பையும் வெளிப்படுத்தினார். பின்னர் நடைபெற்ற முக்கிய ஆலோசனையின் போது, தேசத்தின் நலன், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் திமுக எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என ராகுல் காந்தி உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்துவது ஜனநாயகத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும், இந்த மசோதாவைத் தோற்கடிக்கத் திமுகவின் ஆதரவு மிக அவசியம் என்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

Rahul Gandhi Embraces M.K. Stalin, Presses DMK to Oppose the Bill

தேசிய அரசியலில் உச்சகட்ட எதிர்பார்ப்பு

முன்னதாக, “தமிழ்நாட்டின் நலனில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; வரலாறு எங்களை எட்டப்பன்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும்” என மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகப் பதிவிட்டிருந்தார். இந்தச் சூழலில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் வந்து சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதால், தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுகவின் இறுதி நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் உற்றுநோக்கி வருகிறது.

MUST READ