spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசமுத்திரக்கனி மீண்டும் அப்பா அவதாரம் எடுத்துள்ள புதிய படம்... ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

சமுத்திரக்கனி மீண்டும் அப்பா அவதாரம் எடுத்துள்ள புதிய படம்… ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் விமானம் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகரும் இயக்குனருமான சமுத்திரக்கனி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது படம் இயக்குவது மட்டுமல்லாமல் நடிப்பிலும் சிறப்பான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

we-r-hiring

தற்போது சமுத்திரக்கனி ‘விமானம்‘ என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குனர் சிவப்பிரகாஷ் என்னலா இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் மீரா ஜாஸ்மின், அனுசியா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தன்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை கேகே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் ஜி ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். சரண் அர்ஜுன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் சமுத்திரகனி மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். எளிய குடும்பத்தை சேர்ந்த ஒரு மகன் அப்பாவிடம் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று ஆசை தெரிவிக்கிறான். அந்த ஆசை நிறைவேறியதா என்பது தான் கதை. இந்தப் படம் வரும் ஜூன் 9ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணி அளவில் வெளியாகும் என்றும் பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் இந்த ட்ரெய்லரை வெளியிட உள்ளார் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

MUST READ