இந்தியா – சீனா எல்லை பிரச்சனை….போராக மாறுமா?
இரு நாடுகளும் அவர்களின் எல்லை நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கின்றனர். இந்த உறுதித் தன்மை தான் பகையை மேலும் வலிமையாக்கி வளர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440 கி.மீ நீண்ட எல்லையில் தான் தகராறு இருந்து வருகிறது.

இந்த இடங்கள் ஆறுகள், ஏரிகள், மலை சிகரங்களாகவும், பனியால் சூழப்பட்டும் இருக்கின்றது.
எல்ஏசி எனப்படும் அசல் கட்டுப்பாட்டுக் கோட்டை இரு நாட்டு வீரர்களும் மதிப்பதில்லை. எல்லை கோடு என்பது லட்சுமணன் கோட்டை விடவும் உயர்ந்தது. மதிக்க வேண்டியது.
ஆனால் இருநாட்டு வீரர்களும் சில நேரங்களில் கோட்டைத் தாண்டி நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றனர். அவரவர் எல்லைப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்கி வருகின்றனர்.
உயரமான இடத்தில் அமைக்கப்பட்ட விமான தளம் வரையிலும் இந்தியா சாலை அமைத்துள்ளது. இதற்கு பல முறை சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பகுதியில் இந்தியா, சீன ராணுவத்தினர் நேருக்கு நேராக மோதிக் கொண்டதில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் சீனா வீரர்கள் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதை பல மாதங்கள் மறைத்து பின்னர் சீனா அரசு ஏற்றுக் கொண்டது.
எல்லை பிரச்சனை தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் பலமுறை நடைபெற்றுள்ளன. இன்னும் நடைபெற்று வருகிறது. ஆனாலும் பதற்றம் குறைந்தப்பாடு இல்லை.
தற்போது அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தவாங்க் என்ற இடத்தில் டிசம்பர் 9ம் தேதி இரு நாட்டு வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சில வீரர்கள் காயமடைந்தனர் என இந்திய ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இது குறித்து இதுவரை சீனா எந்த ஒரு கருத்தும் வெளியிடவில்லை.
1996ஆம் ஆண்டில் எல்லையில் இரு நாடுகளும் துப்பாக்கி அல்லது வெடி பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்று ஒப்பந்தம் செய்திருந்தன.
அந்த ஒப்பந்தத்தை மீறி ஏற்பட்ட மோதலில் தனது வீரர்கள் கொல்லப்பட்டதை இந்தியா ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால், பல மாதங்களாக சீனா தனது வீரர்கள் கொல்லப்பட்டதை குறித்து பேசுவதை தவிர்த்து வருகிறது. எனினும், இந்த மோதலுக்கு இந்திய ராணுவ வீரர்களே பொறுப்பு என சீன கூறியிருந்தது.
டிசம்பர் 9ஆம் தேதி இரு தரு தரப்பிலும் மோதல் நடந்ததை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13ஆம் தேதி அதனை உறுதிப்படுத்தினார். ஆனால், காயம் அடைந்தவர்கள் எத்தனை பேர், இந்திய தரப்பில் என்னென்ன சேதம் ஏற்பட்டன என்பதை அவர் தெரிவிக்கவில்லை. நடந்த மோதலில் இந்திய வீரர்களில் ஒருவர் கூட இறக்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி விமர்சனம்
சீனா போருக்கு தயாராகி வருகிறது. ஆனால் நமது ஒன்றிய அரசு ஆழ்ந்த தூக்கித்தில் உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்தியாவிற்கு சொந்தமான 2000 சதுர கிலோ மீட்டர் நில பரப்பை சீனா கைப்பற்றி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லை பகுதியில் நமது வீரர்களை தாக்கும் முயற்சியில் சீன ராணுவம் ஈடுப்பட்டு வருவதாக கூறினார். இதற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரிஜிஜூ கன்டனம் தெரிவித்துள்ளனர்.