- Advertisement -
கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய இளைஞரிடம் கேட்டு அதை வீடியோவாக பதிவு செய்து முகநூலில் வெளியிட்ட பாஜக நிர்வாகிமீது சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் வசித்து வரும் தனசேகர் இவர் பாஜக மாநில நிர்வாகியாக உள்ளார் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளதால் கஞ்சா போதையில் இருந்த சற்று மனநலம் குன்றிய காலேஷா என்ற இளைஞரிடம் கஞ்சா எங்கே கிடைக்கிறது என கேட்டு மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த குறிப்பிட்ட சில நபர்கள் குறித்தும். குறிப்பாக ஷரிப் விற்பனை செய்கிறாரா? அல்லது அவரது மகன் அகமது பாஷா விற்பனை செய்கிறாரா என கேட்ட கேள்வி அனைத்திற்கும் ஆமாம் ஆமாம் என்று பதில் கூறும் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருந்ததால் இதனைக் கண்ட அகமது பாட்ஷா தனது தந்தை பெயருக்கு கலங்கும் விளைவிக்கும் வகையில் முகநூலில் வீடியோ பதிவிட்டுள்ள பாஜக நிர்வாகி தனசேகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்து சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போதும் சாலை மறியலில் ஈடுபட்டும் இது குறித்து எந்த பதிலும் கூறாததால் அவரது உறவினர்கள் ஆறு பேர் கொண்ட கும்பல். திருக்கழுக்குன்றம் காணக்கோயில் பேட்டை பகுதியில் தனது காரில் சென்ற பாஜக நிர்வாகி தனசேகரை வழிமறித்து கையில் கிடைத்த இரும்பு பொருட்களை வைத்து சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் முகங்களில் பலத்த காயமடைந்த தனசேகர் மயக்க நிலையில் இருந்த போது அப்பகுதியில் இருந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் ஏழு பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் அசம்பாவிதம் ஏதும் நேரிடாமல் இருக்க ஏராளமான போலீசார் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க மாமல்லபுரம் டி எஸ் பி ஜெகதீஸ்வரன் தலைமையில் நான்கு
தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்
