spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

-

- Advertisement -

 

தமிழகத்தில் இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!
File Photo

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (ஜூன் 02) ஒடிஷா மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளதோடு, முதலமைச்சர், ரயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும், தேவைப்படின், தமிழகத்தின் மருத்துவக் குழு மற்றும் இதர உதவிகளை அனுப்பி வைப்பதாகவும் ஒடிஷா மாநில முதலமைச்சரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்துக் கொண்டார்.

we-r-hiring

கோரமண்டல், ஹவுரா ரயில்கள் மோதி கோர விபத்து!

மேலும், மீட்புப் பணிகளில் உடனிருந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்திட போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் இ.ஆ.ப., ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப., ஆகியோர் கொண்டக் குழு விபத்து நடைபெற்ற ஒடிஷா மாநிலத்திற்கு விரைந்து செல்ல தமிழக முதலமைச்சர் அனுப்பி வைத்துள்ளார்.

“ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம்”- மத்திய ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

இந்த நிலையில், ஒடிஷா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (ஜூன் 03) ஒருநாள் மட்டும் துக்கம் அனுசரிக்கப்படும். மேலும், அரசின் சார்பில் இன்று நடைபெறவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.” இவ்வாறு தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ