spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் - மு.க.ஸ்டாலின்

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் – மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

தமிழக வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய பேராசிரியரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 7500 கோடியில் பேராசிரியர் அன்பழகனாரின் பெரில் பள்ளி மேம்பாட்டு திட்டம் என்ற ஒரு திட்டத்தை திமுக அரசு அறிவித்தது.

7500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகனாரின் பெயரில் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்” அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவியர்கள் பேராசிரியர் திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

we-r-hiring

முன்னாள் அமைச்சரும் திமுக முன்னாள் பொதுச் செயலாளருமான இனமான பேராசிரியர் அன்பழகனாரின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு மாதவரம் வடக்கு பகுதி திமுக சார்பில் பேராசிரியரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

முன்னதாக அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பேராசிரியரின் திருஉருவப்படத்திற்கு மாதவரம் வடக்கு பகுதி செயலாளர் புழல் நாராயணன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

மேலும் பேராசிரியரின் பிறந்தநாளை கல்விக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கிய திமுக தலைவர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளும் பேராசிரியர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கற்றல், கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்கு பேராசிரியர் பெயரில் விருது வழங்குவதற்கு அறிவித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்தனர்.

MUST READ