

இணையவழி சூதாட்டத் தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில் வரும் ஜூன் 30- ஆம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
”வைகோவுக்கு திறமை இல்லை; அவரால் கட்சியை நடத்த இயலாது”
கடந்த மார்ச் 23- ஆம் தேதி அன்று தமிழக அரசு நிறைவேற்றிய இணையவழி சூதாட்டத் தடை மற்றும் இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்து பல நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தனர். அரசுத் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல், எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், வரும் ஜூன் 4- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்!
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்யவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, பதில் அளிக்க தமிழக அரசுக்கு, வரும் ஜூன் 30- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.