Homeசெய்திகள்அரசியல்அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்!

-

 

முன்னாள் எம்.பி.மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார்!
Photo: TAMILNADU BJP

அ.தி.மு.க.வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்தது. அப்போது, முதலில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தடாக்டர் மைத்ரேயன், பின்னர் எடப்பாடி பழனிசாமி அணி பக்கம் வந்தார். இந்த நிலையில், கடந்த 2022- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அ.தி.மு.க.வில் இருந்து மைத்ரேயன் நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று (ஜூன் 09) காலை 11.00 மணியளவில் டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார் டாக்டர் மைத்ரேயன். அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்துக் கொடுத்தும் வரவேற்றார் சி.டி.ரவி.

யார் இந்த மைத்ரேயன்? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!

அரசியல் மீதான ஈர்ப்பு காரணமாக பா.ஜ.க.வில் டாக்டர் மைத்ரேயன் இணைந்தார். பின்னர், 1991- ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1995 முதல் 1997 வரை பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராகவும், 1997 முதல் 1999 வரை கட்சியின் மாநில துணைத் தலைவராகவும், 1999 முதல் 2000 வரை மாநில தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

இந்த நிலையில், கடந்த 2000- ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இருந்து விலகிய டாக்டர் மைத்ரேயன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். அதன் தொடர்ச்சியாக, அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்கி கௌரவித்தார் ஜெயலலிதா.

கடந்த 2002- ஆம் ஆண்டு ஜனவரி 15- ஆம் தேதி முதல் 2019- ஆம் ஆண்டு ஜூலை 24- ஆம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ