spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!

-

- Advertisement -

 

சென்னை பல்கலைக்கழகத்துக்கு கருணாநிதி பெயர்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
Photo: TN Govt

தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்டப் பகுதிகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டணத்தில் எந்த வித உயர்வும் இல்லை. வேளாண் மக்களுக்காக இலவச மின்சாரம், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மின்கட்டணம் குறைவாக உள்ளது. வணிக நிறுவன மின் கட்டணம் 13 பைசாவில் இருந்து 21 பைசா வரை மட்டுமே உயர்வு இருக்கும்.

we-r-hiring

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிக்கு அனுமதியில்லை- சிவசங்கர்

அ.தி.மு.க. ஆட்சியின் போது மின் கட்டணம் செங்குத்தாக உயர்த்தப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் மின்வாரியத்தை கடனில் மூழ்கடித்துவிட்டு சென்று விட்டனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது உதய் திட்டத்தில் அ.தி.மு.க. கையெழுத்திட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதய் திட்டத்தில் அ.தி.மு.க. கையெழுத்திட்டதால் பாதிப்புகளைச் சந்திக்கிறோம். தற்போது மத்திய அரசின் அமைச்சரவையில் தான் மாற்றம் வரும் என செய்திகள் வருகின்றன.

சென்னை பல்கலைக்கழகத்துக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயர் வைக்கப்படுவது பற்றி பரிசீலிக்கப்படும். பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் இருப்பதற்கு ஆளுநர் தான் காரணம். இதற்காகத்தான் பல்கலைக்கழகங்களில் முதலமைச்சரே வேந்தராக இருக்க சட்டம் இயற்றியுள்ளோம். ஆவினில் சிறார்கள் பணியில் அமர்த்தப்பட்டது தவறான செய்தி; திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய். மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும்.

வாய்க்கால் பராமரிப்பு பணி – கரூர் மாவட்ட கலைக்டர்

மேகதாது அணை கட்டுவதை எதிர்ப்பதில் தி.மு.க. அரசு உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது. நாங்கள் நினைப்பது நடந்தால் ஆளுநர் விவகாரத்தில் இவ்வளவு பிரச்சனை இல்லை. விவசாயிகளின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக தி.மு.க. அரசு செயல்படும். டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதும் தமிழக அரசு எதிர்த்தது” என்று கூறியுள்ளார்.

MUST READ