spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅமித்ஷா வந்தபோது மின்வெட்டு ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்

அமித்ஷா வந்தபோது மின்வெட்டு ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்

-

- Advertisement -

அமித்ஷா வந்தபோது மின்வெட்டு ஏன்?- செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பழுதால் மின்வெட்டு ஏற்பட்டது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Image

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னை விமான நிலையம் அருகே மின்வெட்டு எதிர்பாராமல் ஏற்பட்டதுதான். சென்னை விமான நிலையத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையின் போது ஏற்பட்ட மின்தடை தற்செயலாக நடந்தது. அது உடனடியாக சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. மின்வெட்டு விவகாரத்தில் அரசியல் செய்யும் பாஜகவின் முயற்சி எடுபடாது. வருமான வரித்துறை சோதனையின்போது முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

we-r-hiring

வணிக நிறுவனங்களுக்கான மின் கட்டணத்தில் சிறிய அளவிலான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய‌ அரசின் அறிவுறுத்தலின்படி, மின்சார ஒழுங்கு முறை ஆணையம் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

MUST READ