Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிவேகமாக பைக் சாகசம்- அரசு பள்ளி மாணவன் பலி

அதிவேகமாக பைக் சாகசம்- அரசு பள்ளி மாணவன் பலி

-

- Advertisement -

தாம்பரம் அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து இரும்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் நண்பனிண்டம் இரவலக கே.டி.எம் பைக்கை வாங்கி ஓட்டிய 17 வயது அரசு பள்ளி மாணவன் உயிரிழந்தார்.

we-r-hiring

வண்டலூர் ஏரிக்கரை தெருவை சேர்ந்த பள்ளி மாணவன் சரண்(17). இவர் மண்ணிவாக்கம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவர் நேற்று இரவு தனது நண்பனிடம் கே.டி.எம் இருசக்கர வாகனத்தை இரவலக வாங்கி வண்டலூர் வாலாஜபாத் சாலையில் சென்றபோது வண்டலூர் ஏரி அடுத்த வளைவு ஒன்றில் அதி வேகமாக சென்றுள்ளார். இதில் பைக் கட்டுபாட்டை இழந்து இரும்பு தடுப்பில் மோதியது. இந்த விபத்தில் மாணவன் சரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

MUST READ