இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்,பயணிகள் வருகையை அதிகரிக்க “குறுகிய கால இலவச பயணத் திட்டத்தை சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தவுள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 118.9 கி.மீ தொலைவிற்கு சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த உடன் சென்னை மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் வருகையை அதிகரிக்க குறுகிய கால இலவச பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிவடைந்த பின்னர் செயல்பட உள்ள 3 வழிதடங்களில், சென்னையை ஒட்டிய புறநகா் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும் என்பதாலும் இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்வா் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மெட்ரோ ரயில்களை அதிகம் பயன்படுத்தாத பயணிகள் 2 வாரம் வரை இலவசமாக பயணம் செய்யும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
