spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுநடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!

-

- Advertisement -

 

நடராஜன் கிரிக்கெட் மைதானத்தைத் திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்!
Photo: Player Natarajan

சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியில் இன்று (ஜூன் 23) காலை 09.30 மணிக்கு நடைபெற்ற விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள ‘நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை’ (NATARAJAN CRICKET GROUND) இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்.

we-r-hiring

“பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் தீவிர முயற்சி”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

இந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் வருண் சக்கரவர்த்தி, திரைப்பட நடிகர்கள் யோகி பாபு, புகழ், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் அசோக் சிகாமணி, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

பாட்னாவில் குவிந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள்!

‘நடராஜன் கிரிக்கெட் அகாடமி’ (NATARAJAN CRICKET ACADEMY) என்ற பெயரில் பயிற்சி மையத்தைத் தொடங்கியுள்ள நடராஜன், ஏழை, எளிய இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளார். அதேபோல், கிரிக்கெட் மைதானம் உருவாக்க வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளதாக நடராஜன் கூறியுள்ளார் .

MUST READ