spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம்

-

- Advertisement -

சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வாளாகத்தில் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய சீன எல்லை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற நிலை குழு கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது.

we-r-hiring

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு சோனியா காந்தி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் நடைபெற்று வரும் இக்கூட்ட தொடரில் காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அனைவரும் கட்டாயம் அனைத்து கூட்ட தொடரிலும் பங்கேற்க வேண்டும் என சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

MUST READ