நெல்சன் திலிப் குமார் மற்றும் ரஜினி கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார்.
மேலும் இப்படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயலராக நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்த படம் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்திருந்தது.வருகின்ற ஆகஸ்ட் 10 ஆம் தேதி இப்படம் வெளிவர இருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் இந்த படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக வருகின்ற ஜூலை 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
மேலும் இவ்விழாவில் பாலிவுட் ஸ்டார் அமிதாபச்சன் பங்கேற்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.