spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமன்னாவிற்கு பரிசளித்த ரஜினி... என்னனு தெரியுமா?

தமன்னாவிற்கு பரிசளித்த ரஜினி… என்னனு தெரியுமா?

-

- Advertisement -

நெல்சன் திலீப் குமார் ரஜினி கூட்டணியில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், தமன்னா, யோகி பாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகியிருக்கிறது.

ரஜினி இந்தப் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார்.

we-r-hiring

‘ஜெயிலர்’ படத்தின் முதல் பாடல் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது மேலும் இப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படம் பான் இந்தியா அளவில் வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக ரஜினிகாந்த், தமன்னா, நெல்சன் திலிப் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகை தமன்னா ” ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. தற்போது ஜெய்லர் படத்தின் மூலம் அது நனவாக்கிவிட்டது. ஜெயிலர் படப்பிடிப்பின் போது நான் கழித்த ஒவ்வொரு நிமிடங்களும் என் நினைவில் இருந்து நீங்காமல் இருக்கும். மேலும் ரஜினி அவரின் கையெழுத்திடப்பட்ட ஆன்மீகப் புத்தகம் ஒன்றை எனக்கு பரிசளித்திருக்கிறார்” என்று கூறியுள்ளார்.

MUST READ