spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாபிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!

-

- Advertisement -

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு எகிப்தின் உயரிய விருது!
Photo: PM Narendra Modi

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, அங்கிருந்து இரண்டு நாள் பயணமாக எகிப்து நாட்டிற்கு சென்றடைந்தார். எகிப்து அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

we-r-hiring

காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிப்பு!

அதைத் தொடர்ந்து, எகிப்து நாட்டின் உயரிய விருதான நைல் விருதை இந்திய பிரதமருக்கு, எகிப்து அதிபர் அப்தெல் ஃ பத்தா வழங்கினார். தலைநகர் கெய்ரோவில், எகிப்து அதிபரைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம், வெளியுறவுத்துறை கொள்கைகள் உள்ளிட்டவைக் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே, எகிப்தில் 1000 ஆண்டுகள் பழமையான அல் ஹகீம் மசூதியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டார். அத்துடன், தொழுகையில் இருந்த இஸ்லாமியர்களுடன் உரையாடினார். அதைத் தொடர்ந்து, அல்-ஹகீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமருக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

“ஜூலை 1- ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்”- ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!

அதன் தொடர்ச்சியாக, எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் முதல் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதைச் செலுத்தினார்.

MUST READ