spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்.... ஹிந்தி படத்தின் ரீமேக்கா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம்…. ஹிந்தி படத்தின் ரீமேக்கா?

-

- Advertisement -

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் லால் சலாம் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் இவர்களுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
மேலும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நிரோஷா நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. குறித்த தகவல் இதுவரை வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் லால் சலாம் திரைப்படம் ஒரு ஹிந்தி படத்தின் ரீமேக் என்று புதிய செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

we-r-hiring

அந்த வகையில் லால் சலாம் படம், கடந்த 2013 ஆம் ஆண்டு சுஷாந்த் சிங் நடிப்பில் வெளியான ‘Kai Po che’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் பில்லா படிக்காதவன் பணக்காரன் வேலைக்காரன் தர்மத்தின் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் அமிதாப்பச்சன் நடித்த ஹிந்தி படங்களின் ரீமேக் திரைப்படங்கள் ஆகும். இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லால் சலாம் திரைப்படமும் ஒரு ஹிந்தி ரீமேக் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ