spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்டெல்லியில் முகாமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி- காரணம் என்ன தெரியுமா?

டெல்லியில் முகாமிட்டுள்ள கே.எஸ்.அழகிரி- காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

we-r-hiring

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவரைத் தேர்வு செய்ய தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், கே.எஸ்.அழகிரி டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

நிதிப் பரிவர்த்தனை அறிக்கை- வருமான வரித்துறை நோட்டீஸ்!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி, சுமார் நான்கரை ஆண்டுகளாகப் பதவியில் நீடித்து வருகிறார். இவரது தலைமையில் மக்களவைத் தேர்தல், சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இருப்பினும், ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டப் போது, கட்சியின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது.

அண்மைக் காலமாக, காங்கிரஸ் கட்சியில் மீண்டும் கோஷ்டி மோதல் வெடித்துள்ளது. இதனிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணியை விரைந்துத் தொடங்கும் வகையில், தமிழகத்தின் மாநிலத் தலைமையை மாற்ற தேசிய தலைமை முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையொட்டி, கே.எஸ்.அழகிரி டெல்லிக்கு புறப்பட்டு சென்றிருக்கிறார். அங்கு மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறும் நிலையில், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியுடன் சிறப்பான பணிகள் நடைபெற்று வருவதால், நாடாளுமன்றத் தேர்தல் வரை மாநில தலைமையை மாற்ற வேண்டாம் என கே.எஸ்.அழகிரி முறையிட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் மனைவி கூடுதல் மனுத்தாக்கல்!

மாநில தலைமை மாற்றம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக கிருஷ்ணகிரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மாநில தலைமையை ஏற்க தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ