முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.“பொய் பேசி தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருக்க ஒரே தகுதியா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் அமைச்சர். தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் தமிழகம் குறித்த உண்மைத் தரவுகளை அறிய கூட முயற்சி எடுக்காமல், விமர்சனங்களில் மட்டுமே ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளாா்.
ஜெர்மனியில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.3,201 கோடி மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அமைச்சர் விளக்கினார். இதில் Knorr Bremse நிறுவனத்துடனும் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், “Knorr Bremse உடன் ஒப்பந்தமா?” என கேள்வி எழுப்புவது, தொழில்துறையைப் பற்றிய நயினார் நாகேந்திரனின் புரிதல் குழந்தைத் தனமானது.

Knorr Bremse நிறுவனம் 120 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய நிறுவனம் என்றும், தமிழ்நாட்டில் இதுவரை எந்த தொழிற்சாலையும் இல்லாத அந்த நிறுவனம், திராவிட மாடல் அரசின் முயற்சியால் சமீபத்தில் சென்னையில் தனது அலுவலகத்தை அமைத்தது என்று குறிப்பிட்டுள்ள அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, திராவிட மாடல் அரசின் கீழ் செயல்படும் தமிழ்நாடு, ஒருபோதும் சில்லறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
இந்தியாவில் மிக அதிக தொழிற்சாலைகள் கொண்டு, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பொருளாதார வளர்ச்சியில் இரட்டை இலக்க சாதனையைப் பெற்றுள்ளதை, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசே அதிகாரப்பூர்வ புள்ளிவிவர அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் போக்கை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கைவிட்டு, உண்மைத் தரவுகளை அறிந்துகொள்ளக் கூட குறைந்தபட்சம் ஒரு முயற்சி எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ராமதாஸ் காதலிச்சா தப்பா? சுசீலாவை வெறுக்கும் அன்புமணி! உமாபதி நேர்காணல்!