டிஜிபி அலுவலக வாசலில் நடந்த மோதல் சம்பவம், ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிகவினர் புகார் அளித்துள்ளனா்.டிஜிபி அலுவலக வாயிலில் இன்று காலை விசிகவினர் மற்றும் புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி ஆகியோரிடையே மாறி மாறி தாக்குதல் சம்பவம் நடந்தது. ஏர்போர்ட் மூர்த்தி சிறிய கத்தியால் வெட்டியதில் விசிகவினர் ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விசிக மாநில துணை பொது செயலாளர் ரஜினிகாந்த் ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விசிகவினர் தினமும் அங்கு டீக்குடிப்பதை அறிந்து கொண்ட ஏர்போர்ட் மூர்த்தி திட்டமிட்டு கத்தியுடன் வந்து, எனக்கு எதிராக பேசி வருகிறீர்களா எனக்கூறி திடீரென திலீபன் மற்றும் ஜாஹிர் ஆகியோரை ஏர்போர்ட் மூர்த்தி தாக்கியதாகவும், இதில் திலீபனுக்கு வெட்டுகாயம் விழுந்ததாகவும், திருமாவளவன் மரணம் என் கையில் தான் எனக் கூறி கொலை மிரட்டல் விடுத்து விசிகவினர் தாக்கினார்.

இது திட்டமிட்டு கொலை முயற்சி செய்த ஏர்போர்ட் மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் தெரிவித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏர்போர்ட் மூர்த்தி தொடர்ந்து திருமாவளவன் குறித்து அவதூறாகவும், ஒருமையிலும், வன்முறைக்கு தூண்டும் வகையிலும் பேசி வருகிறார். விசிகவினர் தான் முதலில் தாக்கியதாக பத்திரிக்கையாளரின் கேள்விக்கு, பதிலளிக்காமல் ஏர்போர்ட் மூர்த்தியின் தூண்டுதலின் பேரில் வந்த ஆளு என பத்திரிக்கையாளர்களுடன் ரஜினிகாந்த் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டும் தோணியில் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏர்போர்ட் மூர்த்தி கத்தியுடன் வந்து ஆபாசமாக பேசி, முதலில் தாக்கியது தொடர்பான வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், காவல்துறையிடம் வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…