அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், இதனை எதிர்த்து சூர்யமூர்த்தி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம், எடப்பாடி தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றி, எடப்பாடிக்கு சாதகமாக உத்தரவிட்டுள்ளது. இதனால், அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் எடப்பாடி பழனிசாமி தொடரும் நிலை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் மீலாது நபி திருநாள் வாழ்த்துகள் – செல்வப்பெருந்தகை