சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை; 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாகவும், கொடுத்த வாக்குறுதிகளை ஒன்றை கூட பா ஜ க அரசு நிறைவேற்றவில்லை கூறியுள்ளது என புதுச்சோியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டுயுள்ளாா்.புதுச்சேரியில் இப்பொழுது ஆளும் ஆட்சியில் தான் கடன் அதிகம் பெற்றுள்ளார்.புதிய கல்வி கொள்கையில் கல்வி தரம் குறைந்துள்ளது. அனைத்து வகுப்புகளுக்கும், பொதுதேர்வு வைப்பதால் மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இந்தி திணிப்பை மாணவர்கள் ஏற்று கொள்ளவில்லை. அதனால் தான் எங்களது ஆட்சியில் புதிய கல்விகொள்கையை எதிர்த்தோம். சிபிஎஸ்இ ஆசிரியர்களுக்கு முழுமையாக பயிற்சி கொடுக்கப்படவில்லை. 10,000 மாணவர்கள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக மத்திய அரசே கூறியுள்ளது.
புதுச்சேரியில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் 2,50,000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என கூறினர். ஆனால் 2000 பேருக்கு கூட வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. பெண்களுக்கு இலவச பேருந்து விடப்படும், கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கிய கடன் ரத்து செய்யப்படும். அரசு காலியிடங்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகள் கொடுத்தனர். ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை என புதுச்சோியின் முன்னாள் முதல்வா் நாராயணசாமி குற்றச்சாட்டுயுள்ளாா்.
