அசின் விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான செய்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அசின். இந்தியிலும் ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். பிஸியான நடிகையாக வலம் வந்த அசின் தொழிலதிபர்-மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவை 2016-ம் ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். . திருமணத்திற்குப் பிறகு அசின் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவர்களுக்கு ஆரின் என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் திடீரென அசின் தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பல செய்திகள் வெளியாகின. தற்போது அதற்கு அசின் விளக்கம் அளித்துள்ளார்.
“இப்போது எங்கள் கோடை விடுமுறையின் நடுவில், எங்கள் காலை உணவை அனுபவித்துக்கொண்டிருக்கும்போது, மிகவும் போலியான மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற செய்திகளைப் பார்த்தேன். நாங்கள் எங்கள் குடும்பத்துடன் எங்கள் திருமணத்தைத் திட்டமிட்டு வீட்டில் அமர்ந்திருந்த நேரத்தை எனக்கு நினைவூட்டுகிறது, நாங்கள் பிரிந்துவிட்டோம் என்று கேள்விப்பட்டோம். அப்படியா! ப்ளீஸ், இதைவிட இன்னும் எதாவது நல்லதாக யோசியுங்கள். (இதற்காக 5 நிமிடம் ஒரு அற்புதமான விடுமுறையை வீணடிப்பது வருத்தமாக தான் இருக்கிறது.) உங்களுக்கு நல்ல நாளாக அமையட்டும்.”என்று அவர் தெரிவித்துள்ளார்.