Homeசெய்திகள்தமிழ்நாடுஉதகை அருகே நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு

உதகை அருகே நெடுஞ்சாலையில் திடீர் நிலச்சரிவு

-

- Advertisement -

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கூக்கல் தொரை கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூக்கல்தொரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் கோத்தகிரி மற்றும் மேட்டுபாளையம் செல்ல உயிலட்டி வழியாக செல்லும் மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த நிலையில் உயிலட்டி என்ற இடத்தில் நெடுஞ்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு காரணமாக சாலையில் பாறைகளும் ,மண் குவிந்ததால் போக்குவரத்து பாதிக்கபட்டது. மேலும் நிலச்சரிவால் விவசாய நிலமும் அடித்து செல்லப்பட்டது. இதனால் 13 கிராம மக்கள் மாற்றுப் பாதை வழியாக கோத்தகிரிக்கு சென்று வரும் நிலையில் மாநில நெடுஞ்சாலை துறையினர் சாலையில் குவிந்து கிடக்கும் பாறை மற்றும் மண்ணைவெட்டி அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

we-r-hiring

இதனிடையே அப்பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தினர் நேற்று இரவு விதிகளை மீறி ஜெசிபி எந்திரத்தை கொண்டு கால்வாய் பணி மேற்கொண்டதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து சம்பந்தபட்ட தோட்டத்தின் உரிமையாளர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ