Homeசெய்திகள்தமிழ்நாடுசிவகாசி: பட்டாசு தொழிலாளர்களை அழைத்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களை அழைத்து சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

-

- Advertisement -

விருதுநகர் மாவட்டம் முழுவதும் ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. பல்வேறு கிராமப் பகுதியில் இருந்து பட்டாசு தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு ஏராளமான வாகனங்கள் தொழிற்சாலைக்கு பரபரப்புடன் செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்று வழக்கம் போல தாயில்பட்டி பகுதியில் இருந்து சுமார் 15 க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்களை வேனில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள வெற்றிலையூரணி பகுதியில் செயல்படும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலைக்கு சென்ற பட்டாசு தொழிற்சாலை வேன் கீழத்தாயில்பட்டி அருகே சாலையில் செல்லும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும் நோக்கில் சாலையின் ஓரத்தில் இறக்கியபோது வேன் நிலை தடுமாறி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் சென்ற பட்டாசு தொழிலாளர்கள் 5க்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர்.

we-r-hiring

இந்த நிலையில் வேன் கவிழ்ந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த நபர்கள் விரைந்து ஓடி வந்து கவிழ்ந்த வேனில் சிக்கி இருந்த தொழிலாளர்களை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். எனினும் யாருக்கும் பலத்த சேதம் இல்லை என்பது அப்பகுதி மக்களிடையே நிம்மதி பெருமூச்சு அடைய வைத்தது.

MUST READ