
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை (ஜூலை 04) டெல்லிக்கு செல்கிறார்.
“சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டியவை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
மேட்டூர் அணையில் இருந்து குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், அணைக்கு நீர்வரத்து வரத்து மிக குறைவாகவே உள்ளதால், அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதற்கு காரணம், கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்து விடாததே என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி, ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட அளவு நீரை கர்நாடக அரசு அணைகளில் இருந்து திறந்துவிட வேண்டும். ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவிட்ட அளவைக் காட்டிலும் மிகக்குறைவாகத் தண்ணீரைத் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படாது என்று கர்நாடக மாநில துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.
இதற்கு அ.தி.மு.க., த.மா.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
கோடாரியால் ஏடிஎம் இயந்திரத்தை அடித்து நொறுக்கி கொள்ளை முயற்சி
இந்த நிலையில், தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நாளை (ஜூலை 03) அரசு உயரதிகாரிகளுடன் டெல்லிக்கு செல்கிறார். டெல்லியில் மத்திய ஜலசக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அதைத் தொடர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைச் சந்திக்கும் அமைச்சர் துரைமுருகன், தமிழகத்திற்கு கர்நாடகா அரசுத் திறந்து விட வேண்டிய தண்ணீரை உரிய நேரத்தில் திறந்து விட வேண்டும் என்றும், மேகதாது அணை தொடர்பான கோப்புகளை நிறுத்தி வைக்குமாறு கோரிக்கை வைக்கவுள்ளார். அதேபோல், காவிரியில் மேகதாது அணைக் கட்டுவதற்கு கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் வலியுறுத்தவுள்ளார்.