spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.... இந்தியா அதிர்ச்சி!

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!

-

- Advertisement -

 

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.... இந்தியா அதிர்ச்சி!
Photo: PMO

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான வர்த்தகப் பரிவர்த்தனையை ரூபாயில் மேற்கொள்வது குறித்து இந்தியா பேச்சுவார்த்தையைத் தொடங்கியது.

we-r-hiring

சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு;

பெருமளவில் டாலரில் வர்த்தகப் பரிமாற்றம் நடந்து வந்த நிலையில், தங்கள் நாட்டு பண மதிப்பிலேயே வர்த்தகம் செய்வது குறித்து இந்த பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்யும் பேச்சுவார்த்தையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா கூறியுள்ளது.

ரூபாய்க்கு பதிலாக சீன யுவான் பண மதிப்பிலோ, பிற நாட்டு பண மதிப்பிலோ வர்த்தகம் செய்யவே ரஷ்யா விருப்பம் தெரிவித்ததாக இந்திய தரப்பு அதிகாரி மூலம் தெரிய வந்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான போர் காரணமாக, ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளனர். இதனால் அமெரிக்க டாலர் மதிப்பைக் காட்டிலும் சீன யுவான் பண மதிப்பில், ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்வதை ரஷ்யா ஊக்குவித்து வருகிறது.

கோதுமை மாவில் சுவையான திருநெல்வேலி அல்வா செய்வது எப்படி?

ரூபாய் மதிப்பில் வர்த்தகம் செய்தால், கரன்சி கன்வெர்சன் செலவு பெரிதும் குறையும் என்று எதிர்பார்த்திருந்த இந்திய இறக்குமதி நிறுவனங்களுக்கு ரஷ்யாவின் இந்த முடிவு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் இறக்குமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய் இறக்குமதி 12 மடங்கு அதிகரித்துள்ளது.

MUST READ