Homeசெய்திகள்தமிழ்நாடு"அனைத்து துறைகளிலும் அனைவரும் கோலோச்சுவதே இலக்கு"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“அனைத்து துறைகளிலும் அனைவரும் கோலோச்சுவதே இலக்கு”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

-

- Advertisement -

 

"பட்டாசுக் கிடங்கு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 3 லட்சம் நிவாரணம்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
Photo: CM MKStalin

சென்னை மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத்துறைச் சார்பில் இன்று (ஜூலை 07) காலை 10.00 மணிக்கு நடைபெற்ற விழாவில் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்து பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைத்துத் துறைகளிலும் அனைவரும் கோலோச்ச வேண்டும் என்பதே தி.மு.க. அரசின் நோக்கம். ஏராளமான கோயில்களில் குடமுழுக்கு உள்ளிட்டப் பணிகளை தி.மு.க. அரசு மேற்கொண்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையை உருவாக்கியதே நீதிக்கட்சி ஆட்சிதான். மேலும், பல்வேறு கோயில்களில் திருப்பணிகளைச் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

we-r-hiring

“ஜூலை 14- ஆம் தேதி சந்திராயன்- 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும்”- இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

அறம் சார்ந்த தொண்டுகள் செய்வதற்கான இந்து சமய அறநிலையத்துறை என பெயர் பெற்றது. சாதியால் யாரையும் தள்ளி வைக்கக் கூடாது என்ற நோக்கில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முறையாகப் பயிற்சிப் பெற்றவர்களாக இருந்தாலும் யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம். அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் பின்பற்றுகின்றன” எனத் தெரிவித்தார்.

நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட தேர்தல் வெற்றிகள்!

இந்த விழாவில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ