spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாநேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு

-

- Advertisement -

நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக ஐந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் வர்த்தக ஹெலிகாப்டர், காத்மாண்டு திரும்பிக் கொண்டிருந்தபோது சோலுகும்பு என்ற பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 6 பேரும் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் மெக்சிகோ நாட்டை சேர்ந்த 5 பயணிகளும் விமானியும் பயணம் செய்துள்ளனர். காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. விமானம் புறப்பட்ட 15 நிமிடங்களில் ஹெலிகாப்டர் தொடர்பை இழந்ததாக கூறப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் பகஞ்சே கிராமத்தின் லம்ஜுராவில் உள்ள சிஹந்தண்டா என்ற இடத்தில் ஹெலிகாப்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. வானிலை மாற்றத்தால் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

MUST READ