Homeசெய்திகள்தமிழ்நாடுமுதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாதா? அண்ணாமலைக்கு அமைச்சர் நேரு பதில்

முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாதா? அண்ணாமலைக்கு அமைச்சர் நேரு பதில்

-

- Advertisement -

சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.

kn nehru mk stalin

சென்னை மடுவின்கரை பகுதியில் திமுக முன்னாள் பொது செயலாளர் க.அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை போற்றும் விதமாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.பேரு பங்கேற்றார்.

we-r-hiring

இதில் கலந்து கொண்டு விழா மேடையில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, “பேராசிரியர் யாரையும் எதிர்த்து நிற்கும் தைரியம் உடையவர். முக ஸ்டாலினுக்கு செயல் தலைவர், தலைவர் பதவி வழங்கியவர் பேராசிரியர் தான். பேராசிரியர் ஒரு உன்னதமான தலைவர். திமுக ஆட்சி அமைத்த போது அரசாங்கத்தில் பணம் இல்லை, கொரோனா, பின்பு வெள்ளம் அப்போது சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. சென்னையில் வடக்கு, தெற்கு எங்களுக்கு தெரியாது, சென்னை வெள்ள பாதிப்புகளை தடுக்க திட்டம் தீட்டி அனைத்து செயல்களையும் முதலமைச்சர் தான் செய்தார்.

அண்ணாமலை சொல்கிறார் எங்கள் முதலமைச்சருக்கு என்ன தெரியும்.. என்று சீனாவில் கொரோனா என்ற சொன்னவுடனே நேற்று தமிழகத்தில் தடுப்பு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தியவர் முதல்வர். அனைத்து துறைகளிலும் அனைத்தும் தெரிந்த முதல்வராக நாட்டை ஆண்டு வருகிறார் முதலமைச்சர். சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி மீண்டும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் சென்னைக்கு 200 ஏக்கர் அளவில் இயற்கை எரியை உருவாக்கம் பணி நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.

MUST READ