ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 2000 பேருக்கு புத்தாடைகள், உணவுப் பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரு வி க நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, தென்னிந்திய பேராயர்களின் தலைவர் அருட்தந்தை ஜான் ஸ்டீஃபன் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு தமது உரையின் போது, அல்லேலுயா என கூறி, கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் பேசிய உதயநிதி, ஒரு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அல்லேலுயா என்று கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து கூறுவது தான், திராவிட மாடல் ஆட்சி என்றார்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் சேகர்பாபு பேசிய வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள ஹெச்.ராஜா,”அறநிலையத்துறை சட்டம் ஷரத்து 10 ன் படி இந்து அல்லாதவர் அத்துறையின் அதிகாரியாகவோ சிப்பந்தியாகவோ இருக்க முடியாது. ஒரு கிறித்தவர் எப்படி அறநிலையத்துறை அமைச்சராக இருக்க முடியும். ஜெய்ஸ்ரீராம் சொல்லிவிட்டு ஒருவர் வக்ஃப் வாரிய தலைவராக தொடரமுடியுமா? Mr. Sekhar babu get out please.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
